கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை ஐம்பத்தி எட்டாக உயர்ந்து விட்டது. இன்னும் பலருக்கு தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிவாரண அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.
எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் இத சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக எதிர்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பேசியதோடு வீடியோ பதிவுகளின் மூலம் எதிர்கட்சியாக ஸ்டாலின் இருந்து போது விடுத்த அறிக்கைகளையும் இப்போது முதல்வராக இருக்கும் போது செய்ததை ஒப்பிட்டு காட்டினார்.
மாவட்ட ஆட்சியர் மரணம் தொடர்பாக கொடுத்த விளக்கத்தின் மீதான சந்தேகத்தையும் முன்வைத்த எடப்பாடி, ஆட்சியர் சொல்லியதில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
கள்ளக்குறிச்சி கள்ளசாராய விற்பனையில் ஈடுபட்ட நபரின் வீட்டு கதவில் ஒட்டப்பட்டிருந்த படம் சொல்லி விடும் ஆளுங்கட்சியின் அரவணைப்போடு தான் சாராய விற்பனை நடந்து வருகிறது என்பதையும் வீடியோ மூலமாக காண்பித்து தனது குற்றச்சாட்டை வைத்தார்.
மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சொன்னதில் உண்மை கிடையாது சிகீட்சைக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு கிடையாது என சாடியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பத்தி எட்டு பேர் இறந்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதிவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பேசியிருந்தார்.