ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி மனு

22

ஒரு காலத்தில் மரத்தடியில், குளக்கரையில் கிராமங்களில் ரம்மி விளையாட்டை பணம் வைத்து சூதாட்டமாக ஆடுவர் சட்டப்படி இது தவறு என்பதால் கிராமங்களில் இது போல நபர்களை அடிக்கடி தேடி பிடித்து கைது செய்வர்.

இது நவீன காலம் என்பதால் இப்போது ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுகின்றனர்.இதனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் இந்த இணையதளங்களில் பணத்தை இழக்கின்றனர்.

சமீபத்தில் புதுவையை சேர்ந்த ஒரு வாலிபர் ரம்மி விளையாட்டில் அடிமையாகி மனைவி மக்களை விட்டு பிரிந்து செல்கிறேன் என தற்கொலை செய்யும் முன்பு அவர் பேசிய ஆடியோ வைரல் ஆனது.

நேற்று ஆந்திர முதல்வர் ஜகன்மோகனும் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பியான மாணிக் தாகூரும் ரம்மி விளையாட்டை தடை செய்ய சொல்லி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆன் லைனில் விளையாடக்கூடிய ரம்பி உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதுதொடர்பான உடனடியாக பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பாருங்க:  சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்