Anbumani
Anbumani

நீட் தேர்வு ரத்து…அறிக்கை விட்டு அதிரடி காட்டிய அன்புமணி ராமதாஸ்!…

நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு நிலையை தான் கடைபிடித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இதே நிலை தான் தொடர்ந்தது.

ஆளும் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்க கோரி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாட்டாளி மக்கள்  கட்சியும் நீட் தேர்விற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

NEET
NEET

அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ் நாட்டில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கல்வி மாணவர்களை சேர்க்க இடங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைகாக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லுமா? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், அதனடிப்படையில் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் எனச் சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசியலின் பிரதான கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நேரத்தில் அன்புமணி ராமதாசும் நீட் தேர்வு விவகாரத்தில்  தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.