காங்கிரஸ் தலைவர்களுடன் மோடி ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

490

பிரதமர் மோடி நேற்று காங்கிரஸ் தலைவர்களான மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இன்று 4000ஐ தொட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றோடு 13 நாட்கள் முடிந்துள்ளன. பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இதுபற்றி பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பட்டில், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ம்ற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளின் முக்கியப் பொருளாக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா எல்லது விலக்கிக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த கட்டமாக இன்று அவர் மத்திய அமைச்சர்களோடு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

பாருங்க:  கேமரா மேன் ஆப் த இயர் - டுவிட்டரில் சுற்றும் வைரல் வீடியோ
Previous articleஒரு அல்வாவே இன்னொரு அல்வாவை கிண்டுகிறதே – அடடா! ஆச்சரியக்குறி!!
Next articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் – மருத்துவமனையில் அனுமதி!