- Homepage
- Latest News
- 100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது…!
100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது…!
100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் அருகே தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்திருப்பதாக பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதர சேகர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் சேகர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் பலி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன்ஜாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் 100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.