Latest News
மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்?…அப்-டேட் கொடுத்த அமைச்சர்…
தமிழக அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது. இந்த கோரிக்கையானது அரசு ஊழியர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில், இது பற்றிய அப்-டேட் ஒன்றை கொடுத்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
புதிய பென்ஷன் திட்டத்தை விட, ஓய்வூதியர்களின் பழைய திட்டத்தில் பலவேறு ஆதாயங்கள் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பென்ஷன் விஷயத்தில் அரசு எடுத்த கொள்கை முடிவின் படி புதிய பென்ஷன் திட்டமே நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும் அமல் படுத்துவது குறித்து இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
பழைய பென்ஷன் திட்டத்திலே பலன்கள் அதிகமாக இருப்பதானால் அதனையே மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தான் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார் அமைச்சர்.
இன்று அவர் சட்டமன்றத்தில் கொடுத்த விளக்கமானது, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலனை போய்க்கொண்டிருப்பதாகவும், இதை சாத்தியப்படுத்த இயலுமா? என்பதை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழு இது சார்ந்த அதிகாரகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்கும்.
அறிக்கையானது வந்த பின்னரே பழைய ஓய்ஊதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர இயலுமா? என்பது தெரிய வரும் என சொல்லியிருக்கிறார்.
பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வர வேண்டும் என்பது தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருப்பது போல தான் தேசிய அளவில் உள்ள ஊழியர்களுக்கும் இருந்து வருகிறது.