Latest News
நடப்பது நல்லதாக இருக்கட்டும்…சாராயம் குறித்து பேசிய அமைச்சர்…
சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது தினமும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
அப்போது உழைப்பவர்கள் தங்கள் உடல் அசதிக்காகவே குடிக்கின்றார்கள். அதற்காகவே அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு டாஸ்மாக்களில் விற்கப்படும் மதுபானங்களில் கிக் இல்லை.குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுக்கள் சாஃப்ட் டிரிங்க்ஸ்கள் (Soft Drinks) போல தெரிகிறது இப்போதெல்லாம். ‘கிக்’கிற்காகவே அவர்களுக்கு சாராயம் தேவைப்படுகிறது.
கள்ளச்சாராய விவகாரத்தில் நடந்தது எல்லாம் நடந்தவைகளாகவே இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்றார். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன அதிகாரிகளை தூக்கில் கூட போட சட்டம் இயற்றலாம். எல்லாத்திற்கும் ஒரு நியாய வேண்டாமா? என சொன்னார்.
கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷனை திறக்கவா முடியும்? என கேள்வி எழுப்பினார். அதே போல மனிதாய் பார்த்து திருந்தா விட்டால் இதை ஒழிக்க முடியாது என்றார்.கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து ஐமப்த்தி ஐந்து பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது சமீபத்தில். இந்த விவகாரம் தொடர்பாக விசாரனை கமிஷனை அமைத்துள்ளது தமிழக அரசு.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருபது பேரை கைது செய்துள்ளது காவல் துறை. எதிர்கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் தான் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாததில் பேசிய போது தான் துரைமுருகன் இப்படி சொல்லியிருந்தார்.