Corona (Covid-19)
பொது இடங்களில் நீராவி பிடிக்க வேண்டாம்-அமைச்சர் மா.சுப்ரமணியன்
தற்போது கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியா முழுவதும் தாண்டவமாடி வருகிறது. குறிப்பாக டில்லி, சென்னை, மும்பை, போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிறந்த வழி நீராவி பிடிப்பது என்று தகவல்களை பலரும் கூறி வருவதால் மக்கள் அனைவரும் நீராவி பிடித்து வருகின்றனர்.
இதற்காக சில இடங்களும் செயல்பட்டு வருகின்றன. நீராவி பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாகவும் இது போல இடங்களில் பிடித்து வருகின்றனர்.
இப்படி செய்வது தவறு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.பா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கூட்டமாக இது போல் ஆவி பிடித்தால் கொரோனா தொற்று ஏற்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீடுகளில் தனித்தனியாக இடைவெளிவிட்டு நீராவி பிடிப்பதால் பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.