கமல்ஹாசன் அதிக ஓட்டு வாங்குவார் – நடிகை கஸ்தூரி அதிரடி டிவிட்

262

கோட்சே பற்றி கமல்ஹாசன் தெரிவித்த கருத்தை ஊதி பெருதாக்கிவிட்டதில் அவருக்குத்தான் லாபம் என நடிகை கஸ்தூரி டிவிட் செய்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனக் கூறியதை, அதிமுகவினரும், பாஜகவினரும் கையில் எடுத்து அதை சர்ச்சையாக்கி அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்நேரத்திலும் கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் என்கிற பதட்டம் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே…பேசியே ஒரு   படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க…. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க” என அவர் டிவிட் செய்துள்ளார்.

பாருங்க:  அதிமுக கூட்டணியில் "புதிய தமிழகம்" கட்சி