அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கருணாஸ்

235
Karunas mla support admk govt

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் வருகிற நாடாளுமன்றத்தில் தனது ஆதரவு அதிமுகவுக்கு என சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ‘நான் அடித்துவிடுவேன் என முதல்வர் பயப்படுகிறார்’ எனப்பேசி அலற விட்டவர் கருணாஸ். அதேபோல், இந்த கருணாஸ் இல்லாமல் கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வரானார்? கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரையும் கடுமையாக விமர்சிக்க கருணாஸ் மீது வழக்குப் பாய்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அவர் பரபரப்பு இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய கருணாஸ், இது ஜெயலலிதா அமைத்த ஆட்சி. எனவே, அதிமுக அரசே இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பதே என் ஆசை.   அதிமுகவிற்கு என் முழு ஆதரவு தொடரும் எனப்பேசியுள்ளார்.

இதற்கு முன்பு தினகரனின் ஆதரவாளர்களில் ஒருவராகவே கருணாஸ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  அதிமுக அரசை கலைக்கும் முயற்சி - முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின்