Latest News
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமணம் கோர்ட் புதிய உத்தரவு
கள்ளக்குறிச்சி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பிரபு.இவர் நீண்ட வருடங்களாக செளந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். செளந்தர்யா கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கோவிலின் குருக்கள் மகளாவார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செளந்தர்யா காணவில்லை என புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் எம்.எல்.ஏ பிரபுவை திருமணம் செய்துள்ளார்.
19 வயதே ஆகும் தன்னுடைய பெண் செளந்தர்யா 39வயதாகும் எம்.எல்.ஏவை திருமணம் செய்தது பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
ஆனால் தன்னை யாரும் கடத்தவில்லை தான் விரும்பிதான் எம்.எல்.ஏவை திருமணம் செய்தேன் என செளந்தர்யா என்ற அந்த பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணை மீட்க வேண்டும் என அவரது தந்தையான கோவில் குருக்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றத்தில் அந்த பெண்ணை ஆஜர்படுத்த வேண்டுமென்று கோர்ட் கோரிக்கை விடுத்துள்ளது.