கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனை சந்தித்த உதயநிதி

14

முன்னாள் முதல்வராகவும் திமுக தலைவராகவும் கருணாநிதி அவர்கள் இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். இவரும் கலைஞரும் உதவியாளர்கள் போல் இருந்ததில்லை நண்பர்கள் போல் இருந்தனர். நீண்ட காலம் கலைஞருடனே இருந்த சண்முகநாதனை தெரியாதவர்கள் யாரும் இல்லை. கலைஞரின் மறைவுக்கு பிறகு  அத்துறைகளை விடுத்து சண்முகநாதன் சென்னையில் வசித்து வந்தார்.

சண்முகநாதன் தற்போது உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஆறுதல் கூறியுள்ளார். அவரை பற்றி உதயநிதி கூறியதாவது.

முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும் என உதயநிதி கூறியுள்ளார்.

பாருங்க:  நீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி
Previous articleஎன் தாய் தந்தை செய்த புண்ணியம்- சூரி பெருமிதம்
Next articleஇயக்குனர் ஜி.என் ரங்கராஜன் மறைவு