Connect with us

முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் பிறந்த நாள் இன்று

Latest News

முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் பிறந்த நாள் இன்று

திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அரசியலில் புகுந்து அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் பதவி உயர்வு பெற்று, எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அக்கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார் என்பதற்கேற்ப மகம் நட்சத்திரத்தில் பிறந்து தமிழ்நாட்டையே ஆண்டவர் இவர்.

ஒரு கண்டிப்பான பள்ளிக்கூட கணித ஆசிரியை போல கட்சியினர் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் இவர். இவரை மீறி எந்த ஒரு வேலையும் நடக்காது. எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தப்பு என்று வந்து விட்டால் அந்த அமைச்சரை உடனடியாக பதவியை விட்டு தூக்கி விடுவார்.

இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். இன்று இவரின் 73வது பிறந்த நாள் ஆகும். இதை அதிமுக தொண்டர்கள் பிரமாண்டமாக பிரமாதமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பாருங்க:  இன்று வரலட்சுமி நோன்பு

More in Latest News

To Top