stalin annamalai
stalin annamalai

பத்து லட்சம் நிவாரணம்…ஆறுதல் சொல்லி ஆணையிட்ட அரசு…ஆர்ப்பாட்டம் அறிவித்த பா.ஜ.க…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமே சோகத்தில் மூழ்கியுள்ளது ‘மெத்தனால்’ கலந்த சாராயம் அருந்தி முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதால்.  தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் பலரின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுள்ளது.

பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை நடந்தது.

இந்த சோக நிகழ்வை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு எதிராக தங்களது கருத்துக்களை சொல்லி, கண்டனங்களை பதிவிட்டும் வருகின்றனர்.

kallakurichi
kallakurichi

அவசர அலோசனை கூட்டத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்ச ரூபாயும், சிகிட்சை பெற்று வருவோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டு ஆணையை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் இப்படியானதொரு துயர சம்பவம் நடந்துள்ளது என கடுமையாக சாடிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இதனை கண்டிக்கும் விதமாக நாளை மறுநாள் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் தனது கட்சியின் சார்பில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதே போல அதிமுக பொதுச்செயளாலரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்துள்ள பத்து லட்ச ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போதாது.

அதனை இருபத்தி ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதோடு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்,