Latest News
எங்க ஆட்சியிலேயும் தான் காய்ச்சினாங்க…ஒபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த முன்னாள் அமைச்சர்…
கள்ளச்சாரய உயிர் பலி விஷயத்தில் தமிழக அரசியல் களம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து, எதிர்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரப்படும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய விஷயம் இப்போது வைரலாகி வருகிறது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது இரண்டு அமைச்சர்கள் எப்போதுமே தமிழ மக்களின் அபிமானத்தை பெற்றவர்களாக இருந்து வந்தனர். ‘செல்லூர்’ராஜூ, ‘திண்டுக்கல்’ சீனிவாசன் இவர்கள் தான் அந்த இருவர். பேச்சுவாக்கில் பொசுக்கென எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வண்ணம் எதாவது உண்மைகளை பொது வழியில் உடைத்து பேசிவிடுவார்கள்.
கள்ளக்குறிச்சி விஷராராய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக வசை பாடி வருகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார்.
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசினார்.
மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் வனத்துறை அமைச்சராக இருந்த போது கள்வராயன் மலைக்கு சென்றிருந்ததாகவும். வனப்பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் அடுப்புகள் எரிந்து கொண்டிருந்தாகவும் சொன்னார்.
அடுப்பகளில் தீமூட்டி சாராயம் காய்ச்சப்பட்டதாக அவர் சொன்னதை கேட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். தங்கள் ஆட்சியில் சாராயம் காய்ச்சப்பட்டதாக பொது வழியில் முன்னாள் அமைச்சர் ஓப்பனாக பேசியிருப்பது சர்ச்சையாகி வருகிறது.