திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் புகழேந்தி. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல மாதம் மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தலைஅறிவித்தது தேர்தல் ஆணையம்.
அதன்படி அடுத்த மாதம் பத்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியில் முக்கிய கட்சிகளாக பார்க்கப்படுவது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி.
திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ம.க சார்பாக அன்புமணியும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபி நயாவும் போட்டியிருகிறார்கள். எதிர்கட்சியான அதிமுக தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக்கூறி இந்த இடைடத்தேர்தலை புறக்கணித்தது.
இதே போல் தேமுதிக இதே காரணத்தால் புறக்கணிப்பதாக அறிவித்தது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலை பதட்டமாக வைத்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடை பெற் உள்ளது.
அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் அந்த கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை முன்னாள் அமைச்சர் செம்மலை விளக்கியிருக்கிறார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது இந்த தகவலை சொன்னார்.

நியாயமாக தேர்தல் நடத்தப்படாது என்பதால் தான் எதிர்கட்சியாக இருக்கும் போதும் அதிமுக புறக்கணித்த நிலையில் அதிமுக தொண்டர்களும் இந்த தேர்தலை புறக்கணிப்பார்கள் என கூறியிருந்தார்.
பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பொது எதிரியாக இருக்கும் திமுகவை வீழ்த்த அதிமுக, தேமுதிகவினர் நாம் தமிழருக்கு ஆதரவு தர வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டிருந்தார்.
அதிமுக, தேமுதிகவினரின் வாக்குகளை பெறுவதற்காகவே சீமான் இப்படி பேசியதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் செம்மலை அதிமுகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது என சொல்லியிருக்கிறார்.