மக்களவை தேர்தல் 2019

மக்களவை தேர்தல் 2019- இன்றோடு முடிந்தது பிரச்சாரம்

8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது.

நாடுமுழுவதும் 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கடைசிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது. வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல் மே 23ம் தேதி 8 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 7ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது.