DMDK demands 10 seats in admk alliance

10 தொகுதிகள் கேட்கும் தேமுதிக – கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பியூஸ் கோயல் நேற்று விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அரசியல் பேசவில்லை என செய்தியாளர்களிடம் பியூஸ் கோயல் பேட்டி கொடுத்தார்.

பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில், தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பிரேமலதா கூறியதாக தெரிகிறது. ஆனால், அதற்கு அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

தேமுதிக கேட்கும் அதிகமான தொகுதிகளை கொடுக்க முடியாத சூழ்நிலையில் அதிமுக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.