Latest News
வெளிநாட்டு சென்ற அண்ணாமலை… ஒருங்கிணைந்த குழுவை அறிவித்த பாஜக…!
அண்ணாமலை மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று நிலையில் ஒருங்கிணைந்த குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டு இருக்கின்றார்.
லண்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்பிற்காக பல நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்து இருக்கின்றது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இவர் அங்கு தங்கி படிக்கும் செலவுகள் அனைத்தையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்கின்றது.
இதற்காக அண்ணாமலை கடந்த 28ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்று இருக்கின்றார். மூன்று மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகின்றது. மூன்று மாதம் அரசியல் படிப்பிற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதால் இந்த இடைப்பட்ட காலத்தில் யார் கட்சி செயல்பாடுகளை கவனிப்பார்கள் என்று ஒரு கேள்வி இருந்தது.
அதற்கு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஹெச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எச் ராஜா தலைமையில் ஆறு பேர்கள் உள்ளனர். அதில் மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம் முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ் ஆர் சேகர் ஆகியோர் பெயர்கள் இந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றது.