cinema news
நீட் தேர்வு அரசுக்கு ஆதரவு கொடுக்கிறாரா அஞ்சு ரூபாய் டாக்டர்?…
நீட் தேர்வு விவகாரம் நாடு முழுவதும் பரவலாக பேசும் பொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூட எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது, பணக்காரர்கள் பயன் பெரும் விதமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என தனது குற்றச்சாட்டினை முன் வைத்தார்.
இதே தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையின் மீது மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு கிராமப்புற மாணவ – மாணவியரை பாதிக்கும் என சொல்லியிருந்தார். நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்டமன்றத்திக் தீர்மாணமும் நிறைவேற்றப்பட்டது.
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ – மாணவியர்களுக்கான பாராட்டு விழாவின் இரண்டாவது கூட்டம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் நடத்தப்பட்டது இன்று. சாதனையாளர்களை கெளரவித்து அதன் பின்னர் பேசிய விஜய். மாநில மருத்துவக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடத்தப்படக் கூடாது என சொன்னார்.
மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய திட்டத்தின் அடிப்படையில் தேர்வு வைப்பது சரியாக வருமா? என கேள்வி எழுப்பினார்.
விழாவில் பேசும் போது விஜய் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டிலேயே பேசினார். விஜய் “மெர்சல்” படத்தில் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கும் மருத்துவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.