கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அருபத்தி ஐந்து பேர் பலியான விவகாரத்தால் பல நாட்களாக பதட்டமாக இருந்து வந்த தமிழ் நாட்டில் இப்போது தான் சகஜ நிலை திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணாமலையை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயளாலர் ஆர்.எஸ். பாரதி.
கள்ளச்சாராய விற்பனையில் அண்ணாமலை கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக பாரதி பேசியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்ந்திருந்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார், உண்மைக்கு புரம்பான விஷயங்களை வெளிப்படுத்தியதால் பாரதி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.
ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள அண்ணாமலை இந்த வழக்கில் வெற்றி பெற்று அதன் மூலம் கிடைக்கும் ஒரு கோடி ரூபாயையும் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்களுக்கு வழங்குவேன் என சொல்லியிருக்கிறார்.
தான் அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை யார் மீது இது போல வழக்கு தொடர்ந்தது கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை விடப்போவதில்லை என காட்டமாக சொல்லியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணாமலையை பார்த்து பாரதி சின்னப் பையன் என சொல்லியிருந்தார்.
ஆர்.எஸ். பாரதி கூட்டுச்சதியில் தான் ஈடுபட்டதாக கூறியது தன்னை துக்க நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்றார். திராவிட முன்னேற்றக் கழகம் முடிவை நோக்கி செல்வது தெரிந்தும் பாரதி இப்படி பேசியிருக்கிறார் என சொல்லியிருந்தார்.
அதோடு ஆர்.எஸ். பாரதி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளதாகவும் அண்ணாமலை சொல்லியிருந்தார்.