Latest News
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…ஜெயக்குமாருக்கு பதில் சொன்ன அண்ணாமலை…
2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களை கூட்டணி அமைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்கொண்டன. அதற்கு பின்னர் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துவங்கி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியை தவிர்த்தே எதிர்கொண்டன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை அரசியல் ஞானி என்றும் அவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியம் என்பது போல பேசுவார் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை வேதாளம் என விமர்சித்தார். அதிமுகவை பற்றியே விமர்சித்து வந்த அண்ணாமலை வேதாளம் இப்போது செல்வப்பெருந்தகை மீது ஏறிஉள்ளது என பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் இந்த பேச்சிற்கு பதிலளித்த அண்ணாமலை பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்திருக்கிறது என்றார். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏராமான பேய்கள் இருப்பதால் ஒவ்வொன்றாகத்தான் ஓட்ட முடியம் என்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை விவாகாத்தை முடித்து விட்டு மீண்டும் அதிமுகவை நோக்கி இந்த வேதாளம் வரும், அது வரை காத்திருக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது.
செல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை பேசியிருந்ததற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.