அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலையை கலாய்த்து வெளியிட்டு இருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லண்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்பிற்காக பல நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்து இருக்கின்றது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இவர் அங்கு தங்கி படிக்கும் செலவு அனைத்தையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும்.
இதற்காக அண்ணாமலை நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்று இருக்கின்றார். மூன்று மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டல் அடிக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அந்த வீடியோவுடன் கூடிய பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது “தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்காரர் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார்.. நான் பார்த்தேன், நீங்களும் பாருங்க.. என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் ஆடுகள் பாடம் படிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/SellurKRajuoffl/status/1829089247745192330