Connect with us

தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்…அரசுக்கு அட்வைஸ் சொன்ன சூர்யா…

surya stalin

Latest News

தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்…அரசுக்கு அட்வைஸ் சொன்ன சூர்யா…

தமிழகத்தையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது கள்ளக்குறிச்சி விஷசாராய மரண சம்பவம். ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

எதிர் கட்சி தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவி விலக வேண்டும் என சொல்லியிருந்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாதிப்பிற்குள்ளானவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். அரசின் மெத்தனைப்போக்கை கண்டித்து மாநிலம் தழுவியஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை அறிக்கை விட்டிருந்தார்.

இதே போல அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

எட்டு திசையிலிருந்தும் இந்த உயிர்பலி சம்பவம் குறித்த கண்டன செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.திரைத்துறையிலிருந்தும் இந்த விஷயத்தில் அதிக கருத்துக்கள் பகிறப்பட்டு வருகிறது.

suryaa

suryaa

நடிகர் சூர்யாவும் இது குறித்து பேசியிருக்கிறார். அறிக்கையின் மூலம் தனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  சொல்லியிருக்கிறார் சூர்யா.

அதில் ‘அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல் பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற அவல மரணங்களை தடுக்க முடியும். குறுகிய கால தீர்வை கடந்து முதலமைச்சர் மதுவிலக்கு கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பாரென நம்புகிறேன்’.

மேலும் தனது அறிக்கையின் வாயிலா ‘மாணவர்கள் கல்வியில் முன்னேற தொலைநோக்கு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்துவதைப் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.

More in Latest News

To Top