4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்!

419

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவை மார்ச் 27 அன்று பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 1585 மனுவில் 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டன, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ம.நீ.ம கட்சியின் நான்கு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான மார்ச் 26-ல் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.

வேட்பு மனு பரிசீலனையின் போது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்தியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.

அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியில் முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு நிராகரிக்கப்பட்டது.

2 மக்களவை, 2 சட்டப் பேரவை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

பாருங்க:  தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்; அஜித், விஜய் வாக்களிப்பு!