2019 மக்களவை தேர்தலில் லஞ்சம்; தடுக்க நடவடிக்கை!

260
தமிழக நாடாளுமன்ற தேர்தல் 2019 - tamilnaduelection2019coin 02

மக்களவை தேர்தலில் சட்ட விரோத பண பறிமாற்றத்தை தடுக்க உயர் மட்டக்குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 11 முதல் மே 23 வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. இத்தேர்தலில், சட்டவிரோதமான பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்து உத்திரவிட்டுள்ளது.

இந்த உயர்மட்ட குழுவில் மத்திய நேரடி வரிகள் துறை அதிகாரி, மறைமுக வரிகள் துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு துறை இயக்குனர், நிதி புலனாய்வு துறை, மத்திய பொருளாதார குற்ற புலனாய்வு துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

வங்கியில் அதிக பணம் டெபாஸிட் ஆவதை கண்டு பிடிக்க மூத்த வங்கி அதிகாரிகள் கொண்ட குழுவும் இந்த உயர்மட்ட குழுவில் இடம்பெற்றுள்ளது.

பாருங்க:  உதவிப்பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்தது!