Connect with us

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்!

வாக்களிக்க 11 அடையாள ஆவணங்கள்

Tamilnadu Politics

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் கொண்ட வாக்காளர் சீட்டு இல்லாவிட்டால் 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் :

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில், வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தனது அடையாளத்தை மெய்ப்பிக்க அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாவிட்டால், வேறு 11 ஆவணங்களை அளிக்கலாம்.

அவை, பாஸ்போட், ஓட்டுநர் உரிமம் ( driving license ), மாநில மத்திய அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ( Aadhar card ), புகைப்படத்துடன் கூடிய வங்கி அட்டை ( bank pass book ), அஞ்சலக கணக்கு புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை காட்டி வாக்களிக்கலாம்.

தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்னால் கொடுக்கப்படும் வாக்காளர் சீட்டு, இனி ஆவணமாக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால், வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்த புகைப்பட வாக்காளர் சீட்டு அச்சிடப்படும். இது ஆவணமாக ஏற்க மாட்டாது என்பதற்கான வாசகம் அதில் இடம்பெறும்.

More in Tamilnadu Politics

To Top