Connect with us

பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

Tamilnadu Politics

பிரதமர் மோடி இன்று குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தார்

இன்று பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்தார். இதற்கான நலத்திட்ட விழா அகஸ்தீஸ்வரம்

விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் பங்கேற்றனர்.முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார்.

அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.தமிழக துணை முதல்வர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை

சவுந்தரராஜன், தம்பிதுரை எம்.பி. ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.பிரதமர் மோடி அவர்கள் இந்த நிகழ்ச்சியில், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை , பாம்பன் – ராமேஸ்வரம் இடையே புதிய பாலத்தை திறந்து வைத்தல் மற்றும் மதுரை – செட்டிக்குளம் இடையே 4 வழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

பாருங்க:  என்னிடம் விளையாட்டு காட்ட வேண்டாம் - கமல்ஹாசன் எச்சரிக்கை

More in Tamilnadu Politics

To Top