வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!

369

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் பல சுயேட்சியை கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதிலிருந்து 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டு, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் :

தமிழகத்தில் நடைபெறும் இடைதேர்தலுக்காக மொத்தம் 518 வேட்புமனுக்கள் தாக்கலானதாகவும், அதில் 215 நிராகரிக்கப்பட்டு, 305 மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன. 39 மக்களவை தொகுதியில், மொத்தம் 1585 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, அதில் 932 ஏற்க்கப்பட்டு, 655 நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 50.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக, திமுக மீது 10 வழக்குகள், அதிமுக மீது 9 வழக்குகள், பாஜக மீது 2, பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் மீது தலா 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

பாருங்க:  திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் - வருமான வரித்துறை!