தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விமர்சித்தவர்கள் இன்று வீட்டு வாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என அவரின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
விஜயகாந்த் உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருவதோடு, தேமுதிக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
நேற்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்ற அவர் கும்பகோணத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:
“விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வரும். அவர் தைரியமானவர். எனவே, அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். தேமுதிக தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜயகாந்த் இல்லாமல் வருங்கால அரசியல் இல்லை. விஜயகாந்துக்கு 2 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கிறது. அவருக்கு உடல் நிலை சரியில்லை என பேசியவர்கள் இன்று கூட்டணிக்காக எங்கள் வீட்டு வாசலில் நிற்கிறார்கள்” என அதிரடியாக அவர் பேசினார்.