வாழ்த்து கூறிய ரஜினி.. நன்றி கூறிய கமல்ஹாசன்

வாழ்த்து கூறிய ரஜினி.. நன்றி கூறிய கமல்ஹாசன்

தேர்தல் தொடர்பாக தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியும், கமல்ஹாசனும் 40 ஆண்டுகால நண்பர்கள். திரையில் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்வில் அப்போது முதல் இப்போது வரை நண்பர்களாக வலம் வருகின்றனர். பொது இடங்களில் சந்திக்கும் போது நட்பை வளர்த்துக் கொள்கின்றனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவுள்ளது. கூட்டணி எதுவும் அமையாவிடில் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் “தேர்தலை சந்திக்கவுள்ள கமல்ஹாசனுக்கு ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நன்றி ரஜினிகாந்த். என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே .. நாளை நமதே.” என பதிவிட்டுள்ளார்.