Tamilnadu Politics
வாக்களிப்பு அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணியை சென்னையில் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தினர்.சென்னை, வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலமாக சென்று, பதாகைகள் மற்றும் துண்டு அறிக்கைகளை மக்களுக்கு வழங்கினர்.
மேலும், ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.மேலும், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த பேரணியில் பங்கேற்ற சென்னை மண்டல தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார ஒருங்கிணைப்பாளர் கோவிந்த்சாமி, சென்னையில் கடந்த ஆண்டு வாக்கு பதிவின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், அதனால் அந்த பகுதியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கூறினர்.
மேலும், பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதாகவும், அதனால் இந்த ஆண்டு வாக்கு பதிவின் எண்ணிக்கை உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.