ரூ.2000 நிதியுதவி திட்டம் முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்!

359
ரூ.2000 நிதியுதவி திட்டம்

ஏழை எளிய குடும்பங்களுக்கும், வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், தலா 2000 நிதியுதவி தருவதாக, கடந்த மாதம் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதற்கான கணக்கிடுப்பும், தொழிலாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த நிலையில், இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளார்.குறிப்பிட்ட சில தொழிலாளிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தி இத்திட்டம் தொடக்கி வைக்க உள்ளது.

கணக்கெடுப்பின் பட்டியலின் படி அனைவரின் வங்கி கணக்கிலும் தொடர்ந்து 2000 ரூபாய் செலுத்தப்பட உள்ளது.
இது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  கொரோனா பாதிப்பு… சந்தேகம் உள்ள வீடுகளில் ஸ்டிக்கர் – அமைச்சர் அறிவிப்பு