Kamal Haasan believe rajini and seeman support

ரஜினி, சீமான் ஆதரவு எனக்கே – கமல்ஹாசன் நம்பிக்கை

ரஜினி, சீமான் ஆகியோரின் ஆதரவு தனக்கு இருக்கும் என நம்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணியை அறிவித்து, கமல்ஹாசன் இன்னும் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் “ நான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களிடம் தெரியும் மாற்றம் தனித்துப் போட்டியிடலாம் என்கிற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஒரு அணி. நேர்மையானவர்கள் எங்கள் அணியில் சேரலாம். ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3வது அணி என்று சொல்லவில்லை. எங்களின் பலம் மக்கள்தான். அவர்களை நோக்கியே பயணிக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.