Tamilnadu Politics
ரஜினி அங்கிள் கூறிய அறிவுரை – நெகிழும் விஜய பிரபாகரன்
தனது தந்தை விஜயகாந்தை ரஜினிகாந்த சந்தித்த போது தனக்கு கூறிய அறிவுரை தன்னை நெகிழ்ச்சி அடைய செய்துவிட்டதாக விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் சமீபத்தில் சென்னை திரும்பினார். அதன்பின், அவரை தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளனர்.
இதில், ஸ்டாலினின் வருகை விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு, ஆச்சர்யாமாகவும், இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும், ரஜினிகாந்தின் வருகை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். விஜயகாந்தின் கன்னத்தை ஆசையாக வருடி ரஜினி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அருகிலிருந்த விஜயபிரகாரனிடம் ‘நீ பேசிய வீடியோக்களை பார்த்தேன். இதேபோல் பணியாற்ற வேண்டும்’ என அறிவுரையும் செய்தார் ரஜினி. இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விஜயபிரகாரன் “ரஜினி அங்கிள் வருகையும், அறிவுரையும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் கூறியது போலவே தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றுவேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.