Tamilnadu Politics
ரஜினியை அடுத்து விஜயகாந்தை சந்தித்த ஸ்டாலின்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில்தான் சென்னை திரும்பினார்,
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு வந்தார். அவரை பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் விஜயகாந்திடம் அவரின் உடல் நிலை குறித்து ரஜினி விசாரித்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
அதன்பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் “அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன். இதில் அரசியல் ஏதுமில்லை” என தெரிவித்தார். இதே கருத்தைத்தான் ரஜினியும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.