யாருடன் கூட்டணி? – டிடிவி தினகரன் பேட்டி

305
யாருடன் கூட்டணி - டிடிவி தினகரன் பேட்டி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஏறக்குறைய கூட்டணிகளை இறுதி செய்துவிட்டன. இதில், தேமுதிக, டிடிவி தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இதுவரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை.

எனவே, மூன்றாவது அணி உருவாகுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், தினகரனுடன் இணைய வாய்ப்பில்லை என கமல்ஹாசன் கூறிவிட்டதால், தினகரன் தலைமையில் 4வது அணி அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 22ம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் 38 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். ஒரு தொகுதி கூட்டணி கட்சிக்கு என டிடிவி தினகரன் கூறியிருந்தார். எனவே, அமமுக தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது

பாருங்க:  தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – திமுக தலைவர் ஸ்டாலின் சர்ச்சை டிவிட் !