Tamilnadu Politics
மோடி ஒரு கோமாளி – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (மார்ச் 21) பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசுகையில் :
மோடி , இந்தியாவின் பிரதமரே இல்லை, அவர் என்.ஆர்.ஐ பிரதமர் என்று விமர்சித்தார்.
மோடி, இப்போது தன் பெயர் முன்னால் காவலாளி என சேர்த்துள்ளார். அவர் காவலாளி இல்லை கோமாளி சர்வாதிகாரி.
அவரின் அடியாட்கள், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். இதில் ராமதாஸூம், அவர் மகன் அன்புமணியும் காமெடியன்கள் என்று காட்டமாக விமர்சித்தார்.
மோடி, ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டும் இந்தியாவில் இருந்துவிட்டு, வெளிநாடு சென்றுவிடுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 55 நாடுகளுக்கு 48 முறை சென்றுவந்திருக்கிறார். தமிழகத்துக்கு 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட வரவில்லை. தேர்தல் அறிவித்த பிறகுதான், இந்த ஒரு மாதத்தில் மூன்று முறை வந்து சென்றிருக்கிறார். புயல் பாதிப்புகள் வந்தபோதும் தமிழ்நாட்டுக்கு மோடி வரவில்லை.
வர்தா புயல் சேதம் ரூ.10,000 கோடி. ஆனால், மோடி கொடுத்தது வெறும் ரூ.266 கோடிதான். கஜா புயல் பாதிப்புக்கு ரூ.15,000 கோடி இழப்பீடு கேட்டோம். ரூ.500 கோடியை மட்டும் கொடுத்த மோடி, அவரின் குஜராத் மாநிலத்தில் ரூ.3,000 கோடிக்கு சர்தார் வல்லபாய் படேலுக்கு மிகப்பெரிய சிலை அமைத்தார்.
ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் அந்தம்மா இறந்துவிட்டாங்கனு சொன்னாங்க. முதலமைச்சரே மர்மமாக இறந்திருக்கிறார், சாமானிய மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்.
எனவே, வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே மோடி என்கிற கேடியின் ஆட்சியை அகற்ற முடியும், என்றார் காட்டமாக.