மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் - பாமகவிலிருந்து விலகிய ரஞ்சித்

மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் – பாமகவிலிருந்து விலகிய ரஞ்சித்

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி ஏற்பட்டு நடிகர் ரஞ்சித் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அன்றி பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி அக்கட்சியிலிருந்து விலகினார். தற்போது அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து, பாமகவின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரஞ்சித் அறிவித்துள்ளார்.

“கூட்டணி தொடர்பாக தொண்டர்களிடம் கருத்துக் கேட்கவில்லை. மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு  மதுக்கடை நடத்துவோரிடம் கூட்டணி வைத்துள்ளனர். மக்களை பாமக ஏமாற்றிவிட்டது.  என்னால் கூஜா தூக்கிக் கொண்டு வாழ முடியாது. அதிமுக அமைச்சர்கள் மீது உழல் புகார்களை கூறிவிட்டு அக்கட்சிக்காக அன்புமணி எப்படி பிரச்சாரம் செய்வார்?”  என ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.