‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!

325
மரமா மக்கள் பிரதிநிதியா

‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது.

இந்த மக்களவை தேர்தலில், சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரச்சாரங்கள், அரசியல்வாதிகளின் வாக்குருதி வீடியோக்கள், சிரிக்கவைத்து, சிந்திக்க வைக்கும் மீம்ஸ்கள் என பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதை பயன்படுத்தி இயற்கை ஆர்வலர்கள், மரம் வளர்க்கும் விழுப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரும், “ஓட்டு போட்டு விட்டு வந்து வீட்டில் ஒரு மரம் நடுங்கள், ஐந்தாண்டில் எது அதிகம் பயன் தருகிறது என்று பாருங்கள்” என்று கூறி இந்த சவாலை அறிவித்துள்ளனர்.

தற்போது, மரமா… மக்கள் பிரதிநிதியா என்ற ஸ்டேடஸ் பலம் பெற்று வருகிறது. ஐந்து வருடத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? மக்கள், மரம் நடுவார்களா? மரங்களின் மூலம் கிடைக்கவிருக்கும் பயன்கள் கிடைக்குமா? மழை வளம் பெருகுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!