மக்கள் நீதி மய்யக் கட்சி குமரவேல் கேள்வி – கோவை சரளா ஆவேசம்!

373
makkal needhi maiam kumaravel

மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வெளியேறியவர் குமரவேல். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலே கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் அவரை வைத்து நேர்காணல் நடத்தியது ஏற்றுகொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்தார்.வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், மக்கள் நீதி கட்சி தலைவர் கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாக கோவை சரளா கூறினார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த கோவை சரளா கூறியதாவது :

குமரவேல் சொன்னது போல் நான் கட்சிக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகிறது, அதனால், எனக்கு அரசியல் அறிவு இல்லை, ஒன்னுமே தெரியாது என்று இல்லை. என்னை முட்டாள் என்று கூறுகிறாரா அவர் என்று ஆவேசமாக பேசினார்.

எனக்கு இந்திய நாட்டின் குடியுரிமை உள்ளது, அந்த அடிப்படையில் தான் கமல்ஹாசன் என்னை அழைத்தார்.. என்னை மட்டுமா அழைத்திருந்தார் ? அரசியலில் சம்மதப்படாத பெரியவர்களையும் தான் அழைத்திருந்தார், அவர்களெல்லாம் அவர் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் மட்டும் தான் தெரிகிறேனா? என்று கேள்வி எழப்பினார்.

பாருங்க:  தமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாசாஹூ!