மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; தேர்தல் ஆணையர்!

312
மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டுக்கொண்டுள்ளார்.
543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற தேர்தல், இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடக்கவுள்ள நிலையில், இன்று ஏப்ரல் 11ம் தேதி, முதல் கட்ட வாக்களிப்பு துவங்கியுள்ளது. இதில், ஆந்திரா உள்பட 20 மாநிலங்கள், மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளிலும், தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது.
ஆந்திராவில் உள்ள, 25 மக்களவை தொகுதிகளுக்கும் இன்றே வாக்குப்பதிவு ஆரம்பமாகி உள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஏப்ரல் 11, தொடங்கி, மே 19 வரை நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 நடக்கவுள்ளது. நடந்து வரும் முதல் கட்ட தேர்தலில், 279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த முதல் கட்ட தேர்தலில், 14 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனில் அரோரா :

மத்தியில் நடக்கபோகும் ஆட்சிக்காக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதற்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், முதன்முதலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாருங்க:  'பி.எம் மோடி' படத்திற்கு தடை - திமுக!