தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்

மக்களவை தேர்தல் 2019 – தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்!

மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில், பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த குழுவினர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து குறித்த ஆவணங்கள் இல்லாத ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் படி, கடந்த 11ம் தேதி பறக்கும் படையினர் மூலம் 19 லட்சத்து 64 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கமும், கண்காணிப்பு நிலைக்குழு மூலம் 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், 12 ம் தேதி பறக்கும் படையினர் மூலம் 1 கோடியே 10 ஆயிர்து 400 ரூபாய் மற்றும் கண்காணிப்பு நிலைக்குழு மூலம் 92 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி மொத்தம் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், 9 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ , சந்தேகத்திற்குரிய பண புழக்கம் குறித்து தகவல் அளிக்க 1800-4256-669 என்ற இலவச எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை தெரிவிக்க 9445467707 என்ற வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.