மக்களவை தேர்தல் போட்டியிடுவேன் – கமல்ஹாசன் அதிரடி

365

வருகிற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தாலும், ஒத்த கருத்துகளை உடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என தொடர்ந்து கமல்ஹாசன் கூறி வருகிறார்.

நேற்று சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன். தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறேன். எந்த தொழிலும் வாரிசு வந்தாலும் அது தவறு கிடையாது. ஆனால், அரசியல் அப்படி இல்லை” என முறைமுகமாக திமுகவை தாக்கிப் பேசினார்.

பாருங்க:  நாடளுமன்ற தேர்தல் 2019 - தேமுதிக கூட்டணியில் குழப்பம்!