மக்களவை தேர்தல் - தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடக்கவுள்ளது. தமிழகத்தில் 8293 வாக்குச் சாவடிகள் பதற்றமான நிலையில் இருக்கும் என்பதால், பாதுகாப்பு பணிகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல பாதுகாப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுப்பட்டு வருகிறது. நாளை வாக்குப்பதிவின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், ராணுவ வீரர்கள் என 3 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.