Connect with us

‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக!

பி.எம் மோடி' படத்திற்கு தடை

Tamilnadu Politics

‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக ‘விவேக் ஓப்ராய்’ நடித்துள்ளார்.

இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 12ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து, திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொறியாளர் பிரிவின் கோவை மாவட்ட துணைச் செயலர் பி.எஸ்.அரசு பூபதி, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனு:

ஓமங்குமார் இயக்கியுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டது. அதில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுகிறது. திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்த திரைப்படத்தை ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அப்படத்தை மே 19-ம் தேதி வரை வெளியிட தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்து.

More in Tamilnadu Politics

To Top