கோ பேக் மோடி

பிரதமர் வருகையை எதிர்த்து போராட்டம்! #Gobackmodi வைரல்!

கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவர் வருகையின் காரணமாக பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவரின் வருகையை எதிர்த்து வைகோ கருப்புக் கொடி காட்டி வருகிறார். இதனால் ம.தி.மு.க.,- பா.ஜ.க இடையே மோதல் வெடித்தது. இதனால் நெல்லை, குமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.

தொண்டர்கள் மத்தியில் உரையாடிய வைகோ, மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு செய்த துரோகங்கள் என்னென்ன என்று பட்டியலிட ஆரம்பித்தார், அப்போது மோடியே திரும்பிப் போ என்று ம.தி.மு.க வினர் கூச்சலிட்டனர்.

அவரின் வருகையை எதிர்த்து ட்விட்டரிலும் “கோ பேக் மோடி” என்ற ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது.பாதுகாப்பு பணிக்காக பல்வேறு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.