துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகசாமி ஆணையம்!

317
28ம் தேதி ஆஜராக வேண்டும் - பன்னீருக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகசாமி ஆணையம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுசாமி ஆணையம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது.  போயஸ்கார்டன் இல்லத்தில் பணிபுரிந்தவர்கள், ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், வருகிற 28ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இன்னும் 4 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  காஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் !