நிரூபிக்கத் தயார்! – மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

378

பாஜகவிடம் ஸ்டாலின் 5 கேபினேட் அமைச்சர்களை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் என நிரூபிப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விட்டுள்ளார்.

திமுக தரப்பில் இருந்து பாஜக தலைமையிடம் 5 கேபினேட் அமைச்சர்களை கேட்டு தூது விடப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொளுத்திப் போட்டார். இது உண்மைதான் என தமிழிசை சவுந்தரராஜனும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இதை வன்மையாக கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “பாஜகவுடன் நாங்கள் பேசியதை நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். இல்லையெனில் தமிழிசையும், மோடியும் பதவி விலக தயாரா?” என சவால் விட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை “தப்புக்கணக்கு போட தமிழகத்தில் ஒரு தலைவர் இருக்கிறார் எனில் அது ஸ்டாலின்தான். நான் உண்மையைத்தான் சொன்னேன். பொய், ஊழல் இல்லாத அரசியல் பாரம்பரியம் எனது. ஸ்டாலின் பாஜகவுடன் பேசியதை எப்போது நிருபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன்” என பதிலளித்துள்ளார்.

பாருங்க:  பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய ரஜினி...