நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – தமிழக தலைமை அதிகாரி சத்ய பிரதா சாஹூ!

369

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்திய பின் சத்ய பிரதா சாஹூ பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது :

தமிழகத்தில், மக்களவை தேர்தல் நடவடிக்கையாக தொகுதிக்கு ஒரு செலவிலா பார்வையாளர் கண்காணிப்பில் ஈடுபடுவர். தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 6.77 கோடி பறிமுதல்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைப்பெறும்.

பாருங்க:  '#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்' ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்!